உத்தமம் இணையத்தமிழ் பயிலரங்கு – யாழ்ப்பாண உயர்தொழில்நுட்ப நிறுவனத்தில்

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் – யாழ்ப்பாண உயர்தொழில்நுட்ப நிறுவனம் (இலங்கை) BCAS பல்கலைக்கழக யாழ்ப்பாணக் கிளை(இலங்கை) அனுசரனையுடன் இணைந்து நடத்திய இணையத்தில் தமிழ் பயன்பாடுகள் பயிலரங்கம் -மு.ப. 9.00 – 4.30 ஆகஸ்ட், 23- 2019

2016 அன்று உத்தமம் நிறுவனம் (இலங்கை) யாழ்ப்பாணஉயர் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்தும் BCAS பல்கலைக்கழக யாழ்ப்பாணக் கிளை அனுசரனையுடன் நடத்திய ஒருநாள் இணையத்தமிழ் பயன்பாடு குறித்த பயிலரங்கம் சிறப்பாக நடத்தப்படட்து.
நிகழ்வில் யாழ்பாண தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு கே கோகுலன், திரு சி சரவணபவானந்தன், முனைவர் துரை.மணிகண்டன், உயர்தொழில்நுட்பத் நிறுவன பணிப்பாளர் C R இரவீந்தரன், உயர்தொழில்நுட்பத் துறைத் தலைவர் திரு.ஹரிஹரஹணபதி, BCAS நிறுவனத்தில் BCAS பல்கலைக்கழக யாழ்ப்பாணக் கிளைப் பாடத்திட்ட இணைப்பாளர் வே. தனுசன்.

தொடக்க நிகழ்வு கலை சுமார் 9.00 மணிக்கு இனிதே தொடங்கியது.இதில் யாழ்ப்பாண உயர்தொழில் நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் (DIRECTOR)பொறியியலாளர் C.R. இரவீந்தரன் தலைமையில் நிகழ்வு தொடங்கியது. தனது உரையில் ஆங்கில மொழிக்கு முன்தோன்றிய தமிழ் மொழி கணினி பாவனையில் பின்நிலையில் இருக்கின்றது. அதனை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென குறிப்பிட்டதுடன்பயிலரங்கம் சிறப்புற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.தகவல்தொழில்நுட்ப துறையின் தலைவர் திரு.சு. ஹரிஹரஹணபதி அனைவரையும்வரவேற்று பேசினார். மேலும் உத்தமம் நிறுவனத்தினுடன் இணைந்து இந்தபயிற்சியை வழங்குவது எங்கள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மேலும்சிறப்புபெறுகிறது என்றார்.

மேலும் பலர் ஆங்கில வழி மூலம் (appa, amma) சமூக வலைதளங்களில்தமிழைத் தட்டச்சு செய்து அனுப்பி வருகின்றனர். இந்த பயிலங்கில் மூலம் இதுகளையப்பட்டு தமிழ் எழுத்துருவிலேயே இனி தட்டச்சு செய்யும் வாய்பைஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்புகின்றேன் என்று கூறினார்.
உத்தமம் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் (இலங்கை)திரு.சி.சரவணபவானந்தன் தன் உரையில் தமிழை இணைய வழியில் கொண்டுசெல்வதற்கு உத்தமம் போன்ற அமைப்புகள் துணைபுரிகின்றன. இந்தஅமைப்பையும், கணினித் தமிழ்ச்சார்ந்த தொழில்நுட்பத்தை அடுத்ததலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பயிலரங்கில் கலந்து கொண்டஇளம் தலைமுறையினரான உங்கள் கையில்தான் இது உள்ளது என்றுகுறிப்பிட்டார்.

நிகழ்வில் உத்தமம் செயற்குழு உறுப்பினர் சி.சரவணபவானந்தன் அறிமுகவுரைய அடுத்து BCAS நிறுவனத்தில் பாடத்திட்ட இணைப்பாளர் வே. தனுசன் அவர்கள் 23ஆம் தேதியில் இணையத்தை பொது பயன்பாட்டிற்கு விட்ட நாள் என்று தன்உரையில் முன்வைத்து, பொருத்தமான தினத்தில் உத்தமம் இப்பயிலரங்கத்தைத்திட்டுமிட்டு நடாத்துவது சிறப்புக்குரியது என்றும் அத்தோடு இந்த நல்ல நிகழ்விற்குஅனுசரனை வழங்குவதில் எங்கள் நிறுவனம் பெருமைக் கொள்கிறது என்றுகூறினார்.

INFITT Conference at Srilanka
நிகழ்வின் முக்கிய விடயமாக முனைவர் துரை.மணிகண்டன் உத்தமத்தின்தோற்றம் மற்றும் அது கடந்த வந்த பாதை தற்பொழுதைய வளர்ச்சி மற்றும்தமிழ்க்கணினிக்கு ஆற்றிவரும் பணிகள் என்று விரிவாக அங்கு இருந்த மாணவமாணவிகள் மற்றும் பல்துறைப் பேராசிரியர்களுக்கு எடுத்து விளக்கினார். அடுத்து இணையத்தமிழ் குறித்த விரிவான செய்தியை எடுத்து விளக்கினார். இணையம் தோன்றிய வரலாறு, இணையத்தில் தமிழின் வரவு, சிங்கப்பூர்பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் தமிழ் இணையப் பங்களிப்பு குறித்துப் பேசினார்.அடுத்து உத்தமம் நடத்திய தமிழ் இணைய மாநாடுகள் மற்றும் அதில்விவாதிக்கப்பட்ட விடயங்களை விளக்கிக் கூறினார். மேலும் தமிழில் தட்டச்சுசெய்வது எவ்வாறு என்று பயிற்சியில் ஈடுபட்ட 60 மாணவர்களுக்கும்செய்முறையில் விளக்கம் தந்து உதவினார். அடுத்து அனைவரும் NHMஎழுத்துருவை பதவிறக்கம் செய்து அனைவரும் தமிழில் தட்டச்சு செய்துபழகினார்கள். குறிப்பாக பாமினி, தமிழ்99, ஒலிபெயர்ப்பு முறையிலும் தட்டச்சுசெய்து பழகினார்கள்.
பயிலரங்கில் எழுது கருவித் தொகுதி வழங்கப்பட்டது. இது நிறைவு செய்தவுடன் தமிழில் வலைப்பதிவை உருவாக்கி அதிழும்எழுதினார்கள். அதற்கான செய்முறை பயிற்சியையும் மிக இலகுவாகக்கற்றுக்கொடுத்தார்.
அடுத்து தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதுவது குறித்தும், தமிழ்விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர்இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் என்பதையும் எடுத்துக் கூறினார்.இவ்வாறு பயிற்சியில் யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும்பேராசிரியர் கோகுலன் அவர்கள் அத்துறையைப்பற்றிய முழு விபரங்களைத்தொகுத்து கட்டுரையாகப் பதிவு செய்துள்ளார் குறிப்பிட்த்தக்கது. இதுவே இந்தபயிலரங்கின் வெற்றியாக கருதலாம். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.

தொழில்நுட்ப துறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாககுறுஞ்செயலிகளை(APPS) உருவாக்கி வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.எவ்வாறு குறுஞ்செயலி உருவாக்கப் படவேண்டும் என்பதை காணொளிகாட்சிமூலம் விளக்கினார். அதன் பயனாக மாணவிகள் நாங்களும் தமிழ்குறுஞ்செயலிகளை உருவாக்கி வெளியிட முன்வருவோம் என்றனர்.

காலை அமர்வின் இறுதியாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் பல விடயங்களைக் கேட்டுத்தெரிந்துகொண்டனர். கலந்துரையாடலில் கணினித் தொழில்நுட்பம் குறித்தும்குறிப்பாகத் தமிழ்க் கணினித் தொழில்நுட்பம் குறித்தும் நடைபெற்றது.

அடுத்து மாலை அமர்வில் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினிவிஞ்ஞானத்துறை விரிவுரையாளர் சர்வேஸ்வரன் கற்றல் கற்பித்தலில்தொழில்நுட்பத்தின் பங்கு, கணினியில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது எவ்வாறுஎன்று விளக்கம் தந்தார். மேலும் OCR, TEXT TO SPEECH, UNICODE, தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், உள்நாட்டு தமிழ் இடைமுகப் பக்கத்தைஉருவாக்குதல், கணினியில் தமிழ்மொழியின் ஆராய்ச்சி போன்ற பலவிடயங்களை எடுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியாக BCAS பல்கலைக்கழகம் சார்பாக பயிற்சியில்கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்குச் கிளை முகைமயாளர் ரசாத் அகமத்சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவெய்தியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*